தமிழக அமைச்சரவையின் மொத்த அனுமதிக்கப்பட்ட பலமான 35 இடங்களில், தற்போது தவெக தரப்பில் 31 பேரும்,
காங்கிரஸ் சார்பில் 2 பேரும் என மொத்தம் 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். சட்டப்படி இன்னும் 2 இடங்கள் காலியாக உள்ள நிலையில், மீதமுள்ள அந்த 2 அமைச்சர் பதவிகள் கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகியவற்றுக்கு தலா ஒன்று என்ற வீதத்தில் வழங்கப்படலாம் என்று
அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.