தமிழக வெற்றிக் கழகம், தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணிக்கு இதுவரை யாரும் இணையாத நிலையில், தனித்துப் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக நிகழ்ச்சியில் பேசிய நிர்வாகி ராஜ்மோகன், “தூய சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் போர் தான் இந்த தேர்தல். இதற்கு நடுவில் `குறுக்க இந்த கௌஷிக் வந்தா' என்பது போன்று சில அரசியல் கோமாளிகள் நாங்களும் இருக்கின்றோம் என்று காமெடி செய்து வருகின்றனர்” என விமர்சித்துள்ளார்.