தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என நீதிபதி கேள்வி

2224பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என நீதிபதி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படுமா? என மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அரசுத் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆணையத்தின் பரிந்துரைகள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி