கோவில்பட்டியில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி 2ஆவது செக்கடி தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் பிரசாத். அங்குள்ள பிரதான சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியரான கணேசன் மகன் சரவணன் புதன்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். இந்நிலையில் சரவணன் நேற்று காலை கடைக்கு வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 13 செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் ரூ. 3 ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த பிரசாத் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.