தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது!

0பார்த்தது
தமிழகத்தை கலக்கிய முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது!
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 முகமூடி அணிந்தவர்களை, கண்காணிப்பு கேமரா ஆதாரத்தை வைத்து போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (28), ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (33) ஆகிய இவர்கள் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்ட நபர்கள் எனத் தெரியவந்தது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே வாகன சோதனையின்போது துரத்திப் பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் ரூ. 20,000 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி