கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வட்டார
போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 3 மினி பஸ்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தது கண்டறியப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 4 பஸ்களில் விதிமுறைக்கு மாறாக பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன. விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.