ரெயிலில் பயணியிடம் வழிப்பறி – 4 வாலிபர்கள் கைது

0பார்த்தது
கோவையில் இருந்து வந்த மரிய அமலதாஸ் என்பவரிடம், தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் ஏறிய 4 பேர் மிரட்டி 4 கிராம் தங்க மோதிரம் மற்றும் ₹300 பறித்துச் சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கணேசன், வசந்தகுமார், ராஜலிங்கம், முத்துக்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க மோதிரம் மற்றும் மற்றொரு செல்போனும் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி