கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையில், டீ குடிக்க வந்த நபர் காரை நிறுத்த முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீயணைப்புத் துறையினர் காரை மீட்டனர். இது குறித்து மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.