பருவமழை குறைவால் விவசாய நிலங்கள் பாதிப்பு: ஆட்சியர் ஆய்வு!

594பார்த்தது
பருவமழை குறைவால் விவசாய நிலங்கள் பாதிப்பு: ஆட்சியர் ஆய்வு!
கோவில்பட்டி, கயத்தாறு, ஒட்டப்பிடாரம் வட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களின் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் இன்று மேல்மாந்தை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, பயிர்களின் வளர்ச்சி நிலை மற்றும் சேத விவரங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி