தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெறும். தினமும் காலை, மாலை அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். 9-ம் நாளான 12-ந்தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். 15-ந்தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவடையும். விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.