தூத்துக்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு, உலகின் முதலாவது உள்ளரங்கு ப்ரான்ச்சைஸ் சிட்டிங் கிரிக்கெட் தொடர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சிறந்த சிட்டிங் கிரிக்கெட் வீரர்கள் எட்டு அணிகளாகப் பங்கேற்று விளையாடினர். இந்தத் தொடர் ட்ரயம்ப் புக் ஆப் வல்ட் ரிக்காட்ஸ் நிறுவனத்தால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். திமுக அரசின் ஊக்கமும், விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் உதவிகளும் வீரர்களின் சாதனைகளுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார். சாதனைக்கு எண்ணங்களும் லட்சியமும் முக்கியம் என்றும், வீரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.