கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மே 21 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடந்த புத்தக கண்காட்சியில் ரூபாய் 6 லட்சத்திற்கான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. கோவில்பட்டியில் நடந்த நிறைவு விழாவில் குலுக்கல் முறையில் தேர்வான வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி ராமலட்சுமிக்கும், ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அனன்யாவுக்கும் தலா ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் 2025 - 26ம் ஆண்டிற்கான தலைவர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குலுக்கல் முறையில் தேர்வான மாணவிகளுக்கு தலா ரூ1000 மதிப்புள்ள புத்தகங்களையும், நிறைவு விழாவிற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் புத்தகங்களையும் பரிசாக வழங்கி பேசினார்.