தமிழகத்திற்கு தலைகுனிவு: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

0பார்த்தது
தமிழகத்திற்கு தலைகுனிவு: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ பேசுகையில், திமுக ஆட்சியில் நிறைகள் குறைவாகவும், குறைகள் அதிகமாக உள்ளதாகவும், துப்புரவு தொழிலாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடும் நிலையில் இந்த ஆட்சியின் அவல நிலை உள்ளதாகக் கூறினார். மேலும், கோவையில் இளம் பெண்ணுக்கு நடைபெற்ற சம்பவம் குறித்து திமுக கூட்டணிக் கட்சிகள் வாய் திறக்காதது கண்டிக்கத்தக்கது என்றும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் குறித்து திமுக பயப்படுவது மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் என்ற நிலைதான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி