கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில், பிரேக் பழுதான சிமெண்ட் டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில், ஒரு குழந்தை மற்றும் 8 பெண்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததில் ஓட்டுநர் உட்பட பயணிகள் சிக்கினர். தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.