கோவில்பட்டி அருகே கார்–பைக் மோதல்: வாலிபர் பலி

1பார்த்தது
கோவில்பட்டி அருகே கார்–பைக் மோதல்: வாலிபர் பலி
கோவில்பட்டி அருகே நாலட்டின்புதூர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 வயது இளைஞர் ஸ்ரீ பாலாஜி உயிரிழந்தார். வேலாயுதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஓட்டிய காரில், சிந்தாமணி நகரைச் சேர்ந்த ஸ்ரீ பாலாஜி ஓட்டிவந்த பைக் மோதியது. படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஸ்ரீ பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த அலெக்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி