டூவிலர் மீது கார் மோதல்; சிசிடிவி பரபரப்பான காட்சிகள்

2பார்த்தது
கோவில்பட்டி அருகே தோணுகால் விளக்கு பகுதியில், அதிவேகமாக வந்த கார் ஒன்று டூவிலரில் மோதியதில் கருவேப்பிலை மொத்த வியாபாரி கடற்கரை (68) மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் (50) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு கோவில் வழிபாட்டில் இருந்து ஊருக்கு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளில், மோதிய கார் டூவிலரை பலத்த தாக்கத்துடன் அடித்து இருவரையும் தூக்கி வீசும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி மேற்கு போலீசார் கார் ஓட்டுனர் அபிலேஷ் (37) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி