கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில், டிரைவர் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி கவிதா மற்றும் மற்றொரு காரில் பயணித்த மந்திரமூர்த்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக இரவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.