கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலசுந்தரி (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அன்னசெல்வராஜ் (49) உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் காரில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.