தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், எஸ்.ஐ. செல்வகுமாருடன் நெருங்கிப் பழகிய பெண் போலீஸ் இந்திரா காந்தி, கருத்து வேறுபாடு காரணமாக தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ, ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக எஸ்.ஐ. தரப்பு அளித்த புகாரின் பேரில், பெண் போலீஸ் இந்திரா காந்தி மற்றும் அவருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட மேலும் 5 பேர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.