கல்லூரி மாணவி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு

0பார்த்தது
கல்லூரி மாணவி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெராக்ஸ் எடுக்க சென்ற நர்சிங் கல்லூரி மாணவி ரம்யா (18) ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனாம்மணியாச்சி கிருஷ்ணா ரயில்வே சுரங்க பாலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம், மாணவி ரம்யாவுடையது என தெரியவந்துள்ளது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி, இது விபத்தா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறைக்காக ஊருக்கு வந்த மாணவி திடீரென ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.