கணவருடன் தகராறு: கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்

0பார்த்தது
கணவருடன் தகராறு: கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் தனது 10 மாதக் குழந்தையுடன் மாயமானார். காதல் திருமணம் செய்துகொண்ட மாரித்துரை – மாரிச்செல்வி தம்பதியினரிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு, மனைவி மாரிச்செல்வி தாலியை கழற்றி வைத்துவிட்டு குழந்தையுடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயத்தார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி