கோவில்பட்டியில் இரட்டை கொலை: சிறுவன் உள்பட 8 பேர் கைது

75பார்த்தது
கோவில்பட்டியில் இரட்டை கொலை: சிறுவன் உள்பட 8 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற அரைமணி நேரத்திற்குள் செண்பகா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவரது மனைவி கஸ்தூரியை வெட்டி படுகொலை செய்தது. 

இதை தடுக்க வந்த அவரது சகோதரர் செண்பகராஜுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். 

இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் கோவில்பட்டி செண்பகா நகரைச் சேர்ந்த சதீஷ் மாதவன் (26), செல்லத்துரை (26), விக்னேஷ் (24), மதன்குமார் (20), கனகராஜ் (24) அர்ஜுன் (24),சுரேஷ் (24) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி