கோவில்பட்டி: புனித நீர் தெளித்த ட்ரோன் விழுந்து காயம்

56பார்த்தது
கோவில்பட்டி அருகே நாலாபுதூரில் உள்ள பழமையான ஸ்ரீ தேவி பூமாதேவி சம்மத ஸ்ரீ கரியமால் அழகர் திருக்கோயிலில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்ற திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவின் போது, புனித நீர் தெளிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன் திடீரென பக்தர்கள் மீது விழுந்தது தேனியைச் சேர்ந்த மும்மூர்த்தி மற்றும் அவரது மனைவி சாரதா காயமடைந்தனர். அவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி