தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். மக்காச்சோளத்திற்கு அரசு கொள்முதல் மையம் அமைத்து, குவிண்டாலுக்கு ரூ. 2,400 விலையில் அரசே வாங்க வேண்டும், கோடைகால சிறப்பு நிதியாக விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்காச்சோள கதிர்கள் மற்றும் மனுவை தபால் மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பினர். இப்போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.