கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து: 2 பேர் பலி

1062பார்த்தது
கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து: 2 பேர் பலி
கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த துயர சம்பவத்தில் ஐயப்பன் மற்றும் மாலதி ஆகியோர் உயிரிழந்தனர். சூர்யபிரகாஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி