100% வாக்குபதிவினை உறுதி செய்திட முதல்தலைமுறை: உறுதிமொழி

0பார்த்தது
100% வாக்குபதிவினை உறுதி செய்திட முதல்தலைமுறை: உறுதிமொழி
கோவில்பட்டியில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில், ரோட்டரி சங்கம் மற்றும் எஸ். எஸ். டி. எம் கல்லூரி ரோட்ராக்ட் கிளப் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இதில் 500-க்கும் மேற்பட்ட முதல்முறை வாக்காளர்கள், எந்தவொரு தூண்டுதலுக்கும் ஆளாகாமல் நேர்மையாக வாக்களிப்பதாகவும், ஏப்ரல் 23 அன்று நடைபெறும் தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்வதாகவும் உறுதிமொழி எடுத்தனர். கல்லூரி நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி