கயத்தாறு: புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; ஆட்சியர் ஆய்வு

63பார்த்தது
கயத்தாறு: புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா; ஆட்சியர் ஆய்வு
கயத்தாறு, மற்றும் கோவில்பட்டி வட்டங்களில் புதிய பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், எட்டு நாயக்கன்பட்டியில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் அதேபோல் கயத்தாறு வட்டம், பன்னீர்குளத்தில் 16 பயனாளிகளுக்கும் மற்றும் வடக்கு இலந்தைகுளத்தில் 121 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவில்பட்டி வட்டம் முப்பம்பட்டி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் வீடு கட்டாத காரணத்தினால் அது ரத்து செய்யப்பட்டு, மீண்டும் 184 பயனாளிகளுக்கு புதிய பட்டா வழங்குவதற்கான இடத்தினை பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி