விஜய்க்கு பரப்புரை அனுமதி கொடுங்கள்”: லயோலா மணி

3பார்த்தது
கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (TVK) பொதுக்கூட்டத்தில், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பேசுகையில், தமிழக அரசியல் இருமுனை போட்டியாக மாறியுள்ளதாகவும், திமுகவுக்கு எதிரான மாற்றுச் சக்தி TVK தான் என்றும் கூறினார். தலைவர் விஜய் தமிழக அரசியலில் புரட்சியை ஏற்படுத்துவார் என்றும், அவருக்கு தமிழகம் முழுவதும் பரப்புரை செய்ய அனுமதி வழங்க திமுக தைரியம் காட்ட வேண்டும் என்றும் சவால் விடுத்தார். "DMK என்ற மூன்றெழுத்தை TVK என்ற மூன்றெழுத்து வீழ்த்தும்; தமிழக முதல்வராக விஜய் வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.