தூத்துக்குடி: மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

75பார்த்தது
தூத்துக்குடி: மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை
கோவில்பட்டி அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனார் ஊத்து கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகையா மகன் கொம்பையா (57). இவர் தினசரி மது போதையில் வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவி சுப்புத்தாய் கண்டித்துள்ளார்.  
இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தூக்கில் தாெங்கினார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி