தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஐயப்பன் (30) மற்றும் மாலதி (25) ஆகியோர் உயிரிழந்தனர். சூர்யபிரகாஷ் (24) என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.