தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அதிகாலை பூஜைகளுக்குப் பிறகு அம்மன் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்து நிலையை அடைந்தது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.