தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு. விஷூ மகாஜன் தலைமையில் மாதாந்திர சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, குற்றச்செயல்கள் தடுப்பு,
போக்குவரத்து ஒழுங்குமுறை, சாலை விபத்துகளை குறைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.