தென்காசி: லாரி டேங்கை உடைத்து டீசல் திருடியவர் கைது!

69பார்த்தது
தென்காசி: லாரி டேங்கை உடைத்து டீசல் திருடியவர் கைது!
கயத்தாறில் பெட்ரோல் பல்க் அருகே நிறுத்தியிருந்த கனரக லாரியின் டீசல் டேங்கின் மூடியை உடைத்து டீசல் திருடியவரை போலீசார் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காரைக்கடை தெருவைச் சோ்ந்த திருமலை முருகையா. இவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி கயத்தாறில் இருந்து எம். சாண்ட் சரக்கு ஏற்றி செல்வது வழக்கமாம். இந்த லாரியில் ஆலங்குளம் கிடாரங்குளம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் அப்புரானந்தம் என்பவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி லாரியில் டீசலை நிரப்பிவிட்டு மழையின் காரணமாக வாகனத்தை ஓட்டாமல் கயத்தாறில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்திவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். பின்னர் 16ஆம் தேதி வந்து பாா்த்தபோது வாகனத்தின் டீசல் டேங்கின் மூடி உடைக்கப்பட்டு டீசல் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா், லாரி உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து லாரி உரிமையாளா் திருமலை முருகையா அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், கிடாரக்குளம் நேரு தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் லட்சுமணனை (41) போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி