கோவில்பட்டியில் உள்ள ஒரு தீப்பெட்டி ஆலையின் குடோனில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் 40 குச்சி மூட்டைகள் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக, ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.