குரும்பூர் அருகே, குடும்ப தகராறில் மன உளைச்சலுக்கு ஆளான பெயிண்டிங் தொழிலாளி முருகன் (38), மது போதையில் ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.