ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை!

1பார்த்தது
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை!
கோவில்பட்டி சுற்றுவட்டார யாதவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பெயரை “அழகுமுத்து தேவர்” என மாற்றி விளம்பர பலகைகள் வைத்ததையும், நினைவேந்தல் நிகழ்ச்சி அரசியல் மேடையாக மாற்றப்பட்டதாகவும் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். கோவில்பட்டி முதன்மை நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி அழகுமுத்துகோன் யாதவர் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய லட்சுமிராஜாவின் மகன்கள் சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும், அரசு ஊழியரான குமாரராஜா போலி சாதி சான்றிதழ் பயன்படுத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த இருவர்மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என யாதவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத் தலைவர் என். ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.