தூத்துக்குடி: பெண்ணை அவதூறாகப் பேசி தாக்குதல்; ஒருவர் கைது

1094பார்த்தது
தூத்துக்குடி: பெண்ணை அவதூறாகப் பேசி தாக்குதல்; ஒருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ராஜபுதுக்குடியில், உணவக உரிமையாளர் கிருபைராஜின் மனைவி தங்கமாரி பணியில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (40) மதுபோதையில் வந்து அவதூறாக பேசி, உணவகத்தின் மீது கற்களை வீசி தாக்கினார். இந்த தாக்குதலில் உணவகத்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன. தங்கமாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் விசாரணை நடத்தி, ராஜாவை கைது செய்து வழக்கு பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்தி