தூத்துக்குடி: ஆட்சியில் பங்கு? வைகோவின் தெளிவான பதில்

816பார்த்தது
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆட்சியில் பங்கு கோருவது கட்சிகளின் உரிமை என்றாலும், மதிமுக இதுவரை எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என்றார். இந்துத்துவ சக்திகளை எதிர்க்க திமுகவுடன் உறுதியாக இருப்போம் என்றும், திமுகவுக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி