கோவில்பட்டி பெருமாள் கோவிலில் மார்கழி சனிக்கிழமை சிறப்பு பூஜை திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ அலமேலுமங்கா பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள் சன்னிதியில் மார்கழி மாதம் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலை 8:00 மணிக்கு பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், தயிர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 11 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தீபாராதனை நடைபெற்றது. திராளான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். இதில் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.