சாலையில் சாய்ந்து நின்ற டாரஸ் லாரி!

1பார்த்தது
சாலையில் சாய்ந்து நின்ற டாரஸ் லாரி!
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்து, தெற்கு கோனார் கோட்டை புதூரில் 40 டன் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி ஒன்று, கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாததால் அதில் பதிந்து சாய்ந்த நிலையில் நின்றது. அதிர்ஷ்டவசமாக லாரி முழுமையாக சாயாததால் அருகில் உள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளை கனிம வளத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி