மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த இந்தத் தேர்வுகள், கல்லறைத் திருநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால், நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.