கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 11ஆம் நாளான இன்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தவசு கோலத்தில் சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்தார். மாலை மாற்றும் வைபவம் மற்றும் மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி–அம்பாள் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.