கோவில்பட்டி அருகே சிதம்பரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தொழிலாளி கணேஷ்குமாரை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் கேட்ட 3 பேர், பணம் இல்லை எனக் கூறியதும் அவரைத் தாக்கி, பைக் மற்றும் ரூ.500-ஐப் பறித்துச் சென்றனர். காயமடைந்த கணேஷ்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து, 16 வயது சிறுவன், சரவணப்பாண்டி (19), கனகராஜ் (22) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.