தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த உலகராஜ் (26) மற்றும் மாரி கிருஷ்ணன் (21) ஆகிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களின் வாகனத்தில் வெள்ளை நிற சாக்கில் வாள் ஒன்றும், ஒருவரின் முதுகில் அரிவாள் ஒன்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.