மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு

2பார்த்தது
மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தேவர் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (40) என்பவர், இரட்டை குளம் அருகே உறவினருடன் மது அருந்தியபோது, மதுபோதையில் சாலையில் நிலைதடுமாறி விழுந்ததில் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் அவரைத் தேடிச் சென்றபோது, அவர் சாலையில் தலைகுப்புற கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதற்கட்ட விசாரணையில் மதுபோதையில் விழுந்ததில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி