பதபதைக்கும் கொலை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு

1பார்த்தது
பதபதைக்கும் கொலை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு
கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியில், மது அருந்திக் கொண்டிருந்த முருகன் (50) மற்றும் மந்திரம் (40) ஆகியோரை, உறவினர் கோமு (55) அரிவாளால் வெட்டியதில் முருகன் உயிரிழந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியைப் பிரிந்ததற்கு இவர்களே காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோமு, இருவரையும் வெட்டிவிட்டு தப்பியோடினார். காயமடைந்த மந்திரம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கயத்தாறு போலீஸார் கோமுவை தேடி வருகின்றனர். கோமு ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

டேக்ஸ் :