இடை நின்ற மாணவர்களுக்கான தொழில்கல்வி சேர்க்கை முகாம்

56பார்த்தது
இடை நின்ற மாணவர்களுக்கான தொழில்கல்வி சேர்க்கை முகாம்
தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் படிப்பில் இடைநின்ற மாணவர்களுக்கான தொழில்கல்வி சேர்க்கை முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேப்பலோடை அரசினர் மகளிர் பாலிடெக்னிக், எட்டயபுரம் தேவனேசம் பாலிடெக்னிக், வேம்பார் கிரேஸ் பாலிடெக்னிக், முள்ளக்காடு ஜெயா பாலிடெக்னிக், சாயர்புரம் சாண்டி தொழிற்பயிற்சி பள்ளி, முத்தையாபுரம் தமிழ் மகளிர் கல்வி நிறுவனம், விளாத்திகுளம் சுந்தரம் அருள்ராஜ் செவிலியர் கல்லூரி, செயிண்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரி, கீதா ஜீவன் கலைக்கல்லூரி போன்ற நிறுவனங்களில் இருந்து நேரடி சேர்க்கைக்கான முகாம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தூத்துக்குடி அன்னை ஜூவல்லர்ஸ் மற்றும் அதானி பவுண்டேஷன் ஆதரவில் நடைபெற்ற முகாம் ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் அண்டன் ரூபன் மற்றும் உதவி தலைமை ஆசிரியை சுமதி மற்றும் சக ஆசிரியர்கள் செய்திருந்தனர். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமலதாசன், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி