கோவில்பட்டி புதுக்கிராமம், திருமங்கைநகர், முகம்மதுசாலியபுரம் பகுதிகளில் ரயில்வே நிர்வாகம் கழிவுநீர் பாதையை மண்ணால் அடைத்ததால், நீர் வெளியேற முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த எம்எல்ஏ கா. கருணாநிதி சம்பவ இடத்துக்கு சென்று ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தற்காலிகமாக கழிவுநீர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் அடைப்பை அகற்றியதால் தற்போது நீர் வெளியேற தொடங்கியுள்ளது.