கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட வீரவாஞ்சிநகர் பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளின் போது குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒப்பந்ததாரர்களும் நகராட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால் குழாய்கள் சரி செய்யப்படாமல் உள்ளன. இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி தோண்டப்பட்ட குழிகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.