
பொன்னேர் பூட்டுதல் விழா கோலாகலம் - விவசாயிகள் உற்சாகம்!
சித்திரை புத்தாண்டு தினமான இன்று, தமிழகம் முழுவதும் விவசாயிகள் பாரம்பரிய முறைப்படி 'பொன்னேர் பூட்டுதல்' நிகழ்வை நடத்தி, உழவுப் பணிகளைத் தொடங்கினர். தூத்துக்குடி அருகே பொட்டலூரணியில் டிராக்டர்கள் மூலமும், விளாத்திகுளத்தில் காளைகள் மூலம் ஏர் பூட்டியும் விவசாயிகள் உழவைத் தொடங்கினர். இந்த ஆண்டு நல்ல மழையும், வளமான விளைச்சலும் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.






































